விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு உள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்தது.
இந்த நிலையில் இரண்டாவது சீசன் இப்போது வரை ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. முதல் சீசனில் நடித்த ஒரு சில நடிகர் மட்டும் இரண்டாவது சீசனில் தொடர்ந்து நடிக்கின்றனர். இந்த சீரியலில் மூத்த மகன் சரவணன் கதாபாத்திரத்தில் விஜே கதிர்வேல் கந்தசாமி நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக சரண்யா துராடி நடிக்கிறார். சரண்யா துராடி நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். ராஜ் டிவி, கலைஞர் செய்தி, புதிய தலைமுறை உள்ளிட்ட பல செய்தி சேனல்களில் செய்தி தொகுப்பாளராக சரண்யா வேலை பார்த்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் சரண்யாவும், விஜே கதிரும் இணைந்து மாலையும் கழுத்துமாக கில்லி பட பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram