வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதிலும் சீரியல்களில் சேலையில் நடித்து வரும் பல பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி.
தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவருக்கு பாண்டவர் இல்லம் சீரியல் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
அதைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஆர்த்தி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.