பஸ்ஸில் தன்னிடம் மோசமாக நடந்த நபர்.. அதிரடியான விஷயத்தை செய்த விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை..!

By Mahalakshmi on வைகாசி 27, 2024

Spread the love

விஜய் டிவியில் சக்திவேல் என்ற சீரியல் மூலமாக நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். அந்த தொடரின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து வருகின்றார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்தது இல்லை என்று கூறியிருக்கிறார்.

   

மேலும் படங்களில் வருவது போல ஒரு சம்பவம் தனது வாழ்க்கையில் நடந்ததாக கூறியிருக்கும் அவர் அதனை பகிர்ந்து இருந்தார். பெண்கள் பேருந்தில் செல்லும் போது சீண்டரில் ஈடுபடும் பலர் இருக்கிறார்கள். கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த நான் பேருந்தில் தான் பயணம் செய்வேன்.

   

 

அப்போது ஒரு நடுத்தர வயது நபர் என்னை தகாத முறையில் உரசி கொண்டே இருந்தார். அந்த நபருக்கு ஒரு குத்து விட்டேன். உடனே அங்கிருந்து இறங்கி சென்றுவிட்டார். ஆனால் எனக்கு ஆதரவாக அந்த பேருந்தில் இருந்த பெண்கள் கூட வரவில்லை. அதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என்று அஞ்சலி பாஸ்கர் பகிர்ந்திருந்தார். இந்த பேட்டியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.