நடுரோட்டில் சண்டை போட்ட மைனா நந்தினி கணவர்.. கைகலப்பில் முடிந்த பிரச்சனை.. கடைசியில் வெளிவந்த உண்மை..!

By Mahalakshmi on மே 27, 2024

Spread the love

மைனா என்று கூறியவுடன் நம் நினைவுக்கு வருவது விஜய் டிவி சீரியல் நடிகை மைனா நந்தினி தான். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும் எதார்த்தமான நடிப்பு மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். மதுரையை சேர்ந்த இவர் சின்னத்திரை மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

   

வட்டார மொழி பேச்சு மூலம் சுலபமாக ரசிகர்களை கவர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதன் பிறகு படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

   

 

அதை தொடர்ந்து மைனா சீரியல் நடிகரும் நடன இயக்குனருமான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கின்றது. தொடர்ந்து சீரியல், படங்கள், ரியல் ஷோக்கள் என கலக்கி வரும் மைனா நந்தினி தற்போது youtube இல் பெண்களுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மனங்களை கவர்ந்து வருகின்றார்,

இந்நிலையில் நடிகை தனது கணவர் யோகேஸ்வரனுடன் காரில் சென்றபோது திடீரென்று பைக்கில் வந்த இரண்டு மூன்று நபர்கள் அவரது கணவருடன் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களது பைக்கை இடிக்க வந்ததாக கூறப்பட்டு வந்த அவர்கள் அடித்து மல்லுக்கட்டும் வீடியோ ஒன்று வெளியில் வைரலாகி வந்தது.

ஒரு கட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்ட அவர்களை சமாதானம் செய்தார் மைனா, அதனைத் தொடர்ந்து அவர் காரில் ஏறி செல்லலாம் என்று எண்ணும்போது குடுகுடுவென்று ஓடி வந்த அந்த நபர்கள் பூவை கொடுத்து ஹாப்பி பர்த்டே என்று கூறியிருந்தனர். இதை பார்த்து ஷாக்கான மைனா நந்தினி அதன் பிறகு தான் தனது பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிராங்க் என்பதை தெரிந்து கொண்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)