குழந்தை பொறந்தாச்சு..! மீண்டும் தாயான சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்..

By Mahalakshmi on வைகாசி 23, 2024

Spread the love

பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் அவர்கள் இரண்டாவது முறையாக பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். கடந்து 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்கின்ற திரைப்படத்தில் தனுஷுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.

   

பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அசதி வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார், பின்னர் தமிழில் அடுத்தடுத்த சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

   

 

அதிலும் இவருக்கு வில்லி  கதாபாத்திரம் நல்ல பொருத்தமாக இருந்தது. சுமார் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி ராஜா ராணி சீரியல் மூலமாக நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி, மோதலும் காதலும் போன்ற சீரியல்களில் நடித்து வருகின்றார். சின்னத்திரையில் சிறந்த நடிகையாக கலக்கி வரும் ஸ்ரீதேவி, அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. குழந்தை பிறந்த பிறகு சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரீதேவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமான பின்னரும் தொடர்ந்து பொன்னி சீரியலிலும், மோதலும் காதலும் சீரியலிலும் நடித்து வந்த ஸ்ரீதேவிக்கு சமீபத்தில் தான் வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்போது கணவர் அசோக்குடன் இணைந்து இவர் நடனமாடிய வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

தனக்கு என சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் ஸ்ரீதேவி அவ்வபோது தன் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து வருவார். நேற்று மருத்துவமனையில் அனுமதித்திருந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.