விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான விஜே அர்ச்சனா பிரபல நடிகரான அருணை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வகிக்கும் விதமாக அர்ச்சனா பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். வெள்ளித்திரையிள் இருக்கும் பிரபலங்களைப் போலவே சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைதள பக்கங்களில் அவர்களை பின்பற்றி வருகிறார்கள். ஒவ்வொரு சீரியல் நடிகர்களுக்கும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி என்கின்ற டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் அருண் பிரசாத். இந்த சீரியலில் அருண் பிரசாத்துக்கு ஜோடியாக ரோஷினி அவர்கள் நடித்திருந்தார்கள்.
முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. விஜய் டிவியில் ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் அர்ச்சனா. பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகி படங்களில் நடிப்பதற்காக காத்திருந்தார். அப்படி இருக்கும் சமயத்தில் அர்ச்சனா அருண் பிரசாத்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வொயல் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டார் அர்ச்சனா.

இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலரான அர்ச்சனா டைட்டிலையும் வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் எங்கு சென்றாலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. தொடர்ந்து பல பேட்டிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு குறும்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். அந்த குறும்படத்தில் அருண் பிரசாத்துக்கு ஜோடியாக அர்ச்சனா நடிக்கின்றார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது இதை பார்த்த பலரும் இவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த அர்ச்சனா தெரிவித்திருந்ததாவது “நாங்கள் இருவரும் காதலிப்பதாக பல மீடியாக்கள் எழுதி வருகிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் இருவரும் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்து வருகிறோம். மற்ற அனைத்துமே மக்களின் கற்பனை என்று கூறி காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. என்னுடைய கேரியரை நன்றாக வளர்த்து நல்ல நிலைமைக்கு வைத்து வந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
