விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஆனது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. TRP-யிலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் என்பவரும், ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா என்பவரும் நடித்து வருகிறார்கள்.
இதில் குறிப்பாக மீனா, ரோகினி, ஸ்ருதி, விஜயா ஆகிய நான்கு கேரக்டர் தான் இந்த சீரியலுக்கு நான்கு தூண்கள் போல இருக்குது என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில்இதில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தங்களுடைய உண்மையான குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் சல்மா அருண் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் இந்த சீரியல் மூலமாக தான் பிரபலமானார். ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சல்மாவின் கணவர் அருண் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுடைய திருமணம் நடந்தது .
இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டருக்கு இருக்கும் மகன் போலவே இவருடைய உண்மையான மகனும் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.