நாகர்ஜுனா முதல் மனைவி யார் தெரியுமா?.. அவங்களுக்கு நடிகர் ராணா டக்குபதிக்கும் இப்படி ஒரு உறவா..?

By Nanthini on மார்கழி 28, 2024

Spread the love

கடந்த சில நாட்களாகவே நடிகர் நாகார்ஜுனா குடும்ப விஷயங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிகை சோபிதாவை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம்  நடந்து முடிந்தது. நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி. அவரை விவாகரத்து செய்த பிறகு தான் நடிகை அமலாவை இரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன் அதில் லட்சுமிக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. அதுபோல அமலாவுக்கு மகனாக பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனா போலவே அவருடைய இரண்டு மகன்களும் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Fact Check About Nagarjuna first Wife Lakshmi Boycott her Son Naga Chaitanya Wedding : மகன் திருமணத்தை புறக்கணித்தாரா நாகார்ஜுனா முதல் மனைவி? உண்மை என்ன?

   

 

   

அதேசமயம் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சோபிதா மீது காதல் வயப்பட்ட நிலையில் அண்மையில் அவரை கரம் பிடித்தார். நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகர்ஜூனா லட்சுமி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மகனாக பிறந்தவர்தான் நாக சைதன்யா. கடந்த 1990 ஆம் ஆண்டு லட்சுமி விவாகரத்து செய்து நாகார்ஜுனா பிரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நாகார்ஜுனாவை போல அவருடைய முதல் மனைவி லட்சுமி விவாகரத்துக்கு பிறகு மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

 

Nagarjuna Ex Wife Lakshmi 2nd Husband : நாக சைதன்யாவின் தாய் லட்சுமி மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? 2வது கணவர் யார்?

அவர் ஸ்ரீராம் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சரத் விஜயராகவனை தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் லட்சுமி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது தாயின் இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லாததால் நடிகர் நாகசைதன்யா தன்னுடைய தாயைப் பிரிந்த தந்தையுடன் வாழ்ந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதற்கு நாக சைதன்யா மறுப்பு தெரிவித்துவிட்டார். தனது தாய் ஹைதராபாத்திற்கு வந்து அமெரிக்கா செல்லும்போது எல்லாம் அவரை நேரில் சென்று நாக சைதன்யா சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

Nagarjuna Ex Wife Lakshmi 2nd Husband : நாக சைதன்யாவின் தாய் லட்சுமி மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? 2வது கணவர் யார்?

நாக சைதன்யா தாய் லட்சுமி தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளரான டக்குபதி ராமா நாயுடுவின் மகள். லட்சுமிக்கு வெங்கடேஷ் மற்றும் சுரேஷ்பாபு என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர் பிரபல நடிகர் ராணா ரகுபதியின் அத்தையாவார். இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிறகு லட்சுமி இன்டீரியர் என்ற தொழிலை தொடங்கினார். லட்சுமி சமீபத்தில் தனது இரண்டாவது கணவருடன் தன் மகன் நாகச் சைதன்யா மற்றும் சோபிதா நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு இருந்தார்.