அய்யய்யோ… இது என்ன விசித்திரமான லுக்கா இருக்கு… தனது பிறந்தநாளில் தான் நடிக்கும் படத்தின் போஸ்டரை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த ரக்ஷிதா…

By Begam on சித்திரை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

#image_title

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து மிகப்பிரபலமானார் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை அவ்வளவு இனிதாக அமையவில்லை. தற்பொழுது இவர் தனது கணவரை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வருகின்றனர்.

   
   

 

இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு வலிமையான போட்டியாளராக ரச்சிதா மகாலட்சுமி இருந்தார் என்பதும் கடைசி நேரத்தில் தான் அதாவது 91 வது நாளில் தான் அவர் எவிக்சன் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளது.

அதில் ஒரு  திரைப்படம் தான் Fire. இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது தனது பிறந்தநாளன்று ஹாட்டான லுக்கில் ‘Fire’ திரைப்படத்தில் தனது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…