மாஸ்டர் போட்ட விதைகள்.. உதவி செய்ய நாங்கள் தயார்.. ராகவா லாரன்ஸ் துவங்கும் ‘மாற்றம்’ அறக்கட்டளை..!

By Mahalakshmi on ஏப்ரல் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த ராகவா லாரன்ஸ். தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறியிருக்கின்றார். ஆரம்ப காலகட்டத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்ய சினிமாவில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் பின்னர் பலருக்கும் உதவி செய்ய முடிவு எடுத்தார்.

   

தான் சம்பாதிக்கும் பணத்தில் தனது தேவைகள் போக மற்ற அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, படிக்க ஆசைப்படும் குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு என கொடுத்து உதவி வந்தார். அது மட்டும் இல்லாமல் பலரிடம் உதவி தொகை வாங்கி நல்லது செய்து வந்தார். இந்த மனசு பலருக்கும் வந்து விடாது.

   

 

பல வருடங்களாக இதனை சிறப்பாக செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். சமீப காலமாக யாராவது கஷ்டப்படுவது தெரிந்தால் அவர்களை தேடி சென்று உதவி செய்து வருகிறார். தற்போது ராகவா லாரன்ஸ் பேசிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த 20 வருடங்களாக இவர் வளர்த்து வந்த பிள்ளைகள் தற்போது நல்ல நிலைக்கு முன்னேறி பல நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள், சம்பாதித்து வருகிறார்கள்.

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாற்றம் என்கின்ற அறக்கட்டளையை நிறுவ இருக்கின்றார். அதை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் ராகவா லாரன்ஸ் யாருக்கு உதவ சொல்கிறாரோ அவருக்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இளைஞர்கள் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.