இந்த புகைப்படத்தில் உள்ள இரு பிரபலங்கள் யார் என்று தெரியுதா..? நல்ல திறமைசாலிகள் தான் பா..

By Mahalakshmi on சித்திரை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் வெங்கட் பிரபு. பிரபல இசையமைப்பாளரான கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார். வெங்கட் பிரபு இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவரது திரைப்படம் என்றாலே மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பு இருக்கும். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகர், பின்னணி பாடகர், திரைகதை ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கின்றார்.

   

2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தற்போது விஜய் அவர்களை வைத்து கோட் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரது தம்பி பிரேம்ஜியும் இவர் இயக்கும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். நடிகராக மட்டுமே பின்னணி பாடகராகவும் இருந்து வருகின்றார்.

   

 

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது தம்பி பிரேம்ஜியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இனி ஒரு சுதந்திரம் என்ற படத்தில் வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் சேர்ந்து ஒரு பாடல் பாடி இருப்பார்கள். அந்த ரெக்கார்டிங் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார் வெங்கட் பிரபு.