அழகிகளின் உடலில் வைரம்… சட்டசபையில் சர்ச்சையைக் கிளப்பிய பிகினி போஸ்டர்- அந்த காலத்திலயே இப்படி ஓரு படமா?

By vinoth

Published on:

பதினாறு வயதினிலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா அடுத்தடுத்து தன்னுடைய படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே வந்தார். அனைத்து பின்புலத்திலும் அவர் படம் இயக்கி இருந்தாலும் அவருடைய கிராமத்துப் படங்கள்தான் அவரின் முத்திரை.

அவர் இயக்கிய படங்கள் வரிசையாக வெற்றி பெற்ற நிலையில் நிழல்கள் மற்றும் காதல் ஓவியம் போன்ற படங்கள் மட்டும் சறுக்கின. இத்தனைக்கும் காதல் ஓவியம் படம் அற்புதமான பாடல்களைக் கொண்டிருக்கும். இதற்கிடையில் ஹாலிவுட் ஸ்டைலில் த்ரில்லிங்காக ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார். அதற்காக நிழல் உலக கடத்தலான வைரக் கடத்தலை தன்னுடையக் கதைக்களமாக தேர்வு செய்துள்ளார். திரில்லிங்கான படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ எனத் தலைப்பு.

   

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்களை உலக அழகியாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக வைரத்தை எப்படிக் கடத்துகிறார்கள் என்பதுதான் கதை. அந்த அழகிகளின் உடலுக்குள் அவர்களுக்கே தெரியாமல் வைரத்தை வைத்து வைரத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்தும் மோசமான வில்லன் ஒருவனை , போட்டோகிராஃபர் ஒருவர் எப்படி அம்பலப்படுத்துகிறார் என்பதே கதை.

இந்த படத்தில் கதாநாயகிகள் மூன்று பேரும் மாடல்கள் என்பதால் நிறைய கவர்ச்சிக் காட்சிகளை எடுத்துள்ளார் பாரதிராஜா, மூன்று பேரையுமே பிகினி உடையில் நடிக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதற்கு ராதா மட்டும் சம்மதிக்கவில்லையாம். மாதவியும் ஸ்வப்னாவும் நடிக்க சம்மதித்துள்ளனர். கதாநாயகிகள் கிளாமராக இருக்கும் புகைப்படத்தையே போஸ்டராகவும் வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

இதனால் படத்தின் போஸ்டரே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘இதுமாதிரியெல்லாம் போஸ்டர் வருது’ என்று சட்டசபையில் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. பிறகு சென்ஸாரிலும் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளது. இதெல்லாம் படத்துக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியை உருவாக்கியுள்ளது. ஆனாலும் படம் ரிலீஸான போது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த படம் பற்றி ஒருமுறை பேசும்போது ‘இந்த படத்தின் எடிட்டிங் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சிவப்பு ரோஜாக்கள் படத்தில் கூட நான் இவ்வளவு ஸ்டைலிஷாக எடிட் செய்யவில்லை” என்று கூறியிருந்தார்.