48 மணி நேரமா வெயிட் பண்ணேன்.. கடைசில கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்சி தான் வந்தேன்.. வேதனையை பகிர்ந்த பிரபல சீரியல் நடிகை..

By Begam on மார்கழி 6, 2023

Spread the love

மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தை வெளுத்துச் சென்ற நிலையில், எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளிக்கிறது. குறிப்பாக, சென்னை வெள்ளத்தில் மூழ்கி  தீவு போல மாறிவிட்டது. இதனிடையே, வேளச்சேரி, ஆதம்பாக்கம், அடையாறு, வடபழனி, ராயப்பேட்டை, ஊரப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் என பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மழை நீர் புகுந்துவிட்டது.

   

இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதுதவிர, மாநகராட்சி ஊழியர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், தாங்கள் இரவு முதல் கழுத்தளவு மழை நீரில் வீட்டிற்குள் இருப்பதாகவும், பல முறை தொடர்பு கொண்ட போதிலும் இன்னும் யாரும் தங்களை மீட்க வரவில்லை என பொதுமக்கள் பலரும் வேதனை தெரிவித்தும் வருகின்றனர்.

   

 

இந்நிலையில் தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் பொதுமக்களையும், இந்த வெள்ளத்தில் சிக்கிய பல சினிமா பிரபலங்களையும் மீட்கின்ற புகைப்படங்களை இணையத்தில் நாம் பார்த்து வருகிறோம். நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டர் மூலம் உதவி கேட்டு பின்னர் மீட்கப்பட்டார். இவரைப்போலவே நடிகை ஆத்மிகாவும்  இணையத்தில் உதவி கோரியிருந்தார்.

தற்பொழுது சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளத்தில் சிக்கி வேதனையுடன் உதவி கேட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் அவர், ‘ 48 மணி நேரமாக காத்துக் கொண்டு இருந்ததாகவும், உதவி தனக்கு கிடைக்கவில்லை என்றும், கடைசியில ஒருவழியா நீச்சலடிச்சு வெளிய வந்துட்டேன். இதுபோல இன்னும் பல குடும்பங்கள் இன்னும் தவிச்சுக்கிட்டு இருக்காங்க’ என்று வேதனையுடன் கூறி பதிவு வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…