பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. அதன் பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கணவருடன் நிறைமாத வயிற்றுடன் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் இந்த புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் நட்சத்திராவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவ அறைக்கு செல்லும் முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முகத்தில் கிரீம் போட்டுக் கொண்டு உதட்டில் லிப்பாம் போட்டுக் கொண்டு சிசேரியன் டெலிவரிக்கு ஃபுல் மேக்கப் உடன் சென்றுள்ளார். ஆப்ரேஷன் தியேட்டருக்கு போகப் போற மேக்கப் என்ன வேண்டி கிடக்கு என அவரின் தாயார் கேட்ட நிலையில், அதற்கு அப்பாவியாக நட்சத்திரா என் குழந்தை என்னை முதல்முறையாக பார்க்கும் போது நான் அழகாய் இருக்க வேண்டும் என்று சிரித்தபடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…