தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் சாம்ஸ். இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹீரோக்களின் வாரிசுகள் ஒரு பக்கம் வாரிசு நடிகர்களாக களமிறங்கி வருகின்றனர். இன்னொரு புறம் காமெடி நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் மகன் யோஹன் சினிமாவில் தற்பொழுது அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர் சாம்ஸ் மகன் யோகன் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியும் முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் “FALL” என்ற வெப் சீரிசில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து ஏர்போர்ட்டில் எடுத்துக் கொண்ட சில அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட இவர்கள் தான் நடிகர் சாம்ஸின் மனைவி மற்றும் மகனா?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…