பிரபல தொகுப்பாளரை கரம் பிடிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!

By Mahalakshmi on ஜூலை 4, 2024

Spread the love

பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான கண்மணியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான சீரியல்களில் பாரதிகண்ணம்மா சீரியல் ஒன்று. இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கண்மணி மனோகரன். வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் செம க்யூட்டாக இருந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள்.

   

   

இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் டூயல் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் ஆசிரியப்படுத்தி இருந்தார்.

 

பிஸியாக இருந்து வந்த கண்மணி தற்போது பெரிதாக எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. சமூக வலைதள பாகங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது எனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.

அவர் தனது நீண்ட நாள் காதலரான அஸ்வத் என்பவரை திருமணம் செய்ய இருக்கின்றார். இவரும் பிரபல டிவி தொகுப்பாளராக சன் டிவி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது கண்மணி மனோகரன் அஸ்வத் ஜோடியின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.