நடிகர் பிரபாஸ் உடன் டேட்டிங் செய்கிறாரா 32 வயது நடிகை.. திடீர் டாட்டூவால் மாட்டிக்கிட்ட பிரபல பாலிவுட் நடிகை..!

By Mahalakshmi on ஆடி 4, 2024

Spread the love

40 வயதை கடந்த நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் பிரபாஸ் 32 வயதான பிரபல பாலிவுட் நடிகையை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கல்கி 2898 ஏடி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருக்கின்றார்.

   

சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபாஸ், திஷா பதானி, அபிஷேக் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிறிய காட்சியாக இருந்தாலும் அதனை பிரபாஸுக்காக நடித்துக் கொடுத்து இருக்கின்றார் திஷா பதானி. இவர்கள் இருவருக்கும் இடையேயான ஒரு ரொமான்டிக் பாடல் இப்படத்தில் இடம்பெற்று இருக்கின்றது.

   

 

இதனை இத்தாலியில் படமாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ கூட வெளியாகி மிகவும் வைரலாகி வந்தது. அந்த ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் இந்த திரைப்படத்தில் திஷா பதானி நடித்து இருக்கின்றார். இந்நிலையில் நடிகை திஷா பதானி பிரபாஸை காதலித்து வருகிறார் என சமீப காலமாக தகவல் பரவி வருகின்றது. பிரபாஸ் உடன் வெளிநாட்டில் திஷா பதானி டேட்டிங் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் திஷா பதானின் தற்போது தனது கையில் புதிதாக டேட்டு ஒன்றை குத்தி இருக்கின்றார். அதில் PD என இருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பல்லாரும் D என்பது திஷாவை குறிக்கும் பி என்பது பிரபாஸை குறிக்கும் என்று கூறி வருகிறார்கள். நடிகர் பிரபாஸுக்கு இதெல்லாம் புதிது கிடையாது. ஏற்கனவே பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர்தான்.

பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தினால் இருவரும் காதல் செய்து வருகிறார்கள் என்று புரளியை கிளப்பி விட்டார்கள். அதற்கேற்றவாறு இவர்கள் இருவரும் அவ்வபோது வெளியில் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வந்தது. அதை தொடர்ந்து இருவருமே காதல் இல்லை என்று மறுத்துவிட்டார்கள். இதற்கிடையில் தற்போது திஷா பதானி இந்த காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கின்றார்.