சோசியல் மீடியா எங்கும் பரவி கிடக்கும் கிசுகிசுக்கள்.. ஒரே போஸ்டில் வாயடைக்க வைத்த நடிகை திரிஷா..!

By Mahalakshmi on ஆடி 4, 2024

Spread the love

நடிகை திரிஷா மற்றும் விஜய் குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக த்ரிஷா வெளியிட்டு இருக்கும் பதிவானது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். நடிகர்களில் எப்படி விஜய் ஒரு முன்னணி இடத்தில் இருக்கிறார்களோ அதே போல நடிகைகளில் சவுத் இந்தியன் குயின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் தான் திரிஷா. ஆரம்ப காலத்தில் திரிஷாவும் விஜய்யும் சேர்ந்து பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.

   

#image_title

   

இவர்கள் காம்போவில் வெளியான திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை த்ரிஷா மீண்டும் விஜயுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தார்கள்.

 

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் எப்போதும் போல வதந்திகளை கிளப்ப ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயத்தில் தான் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் மீண்டும் திரிஷாவுடன் சேர்த்து பேச தொடங்கி விட்டார்கள். இதற்கிடையில் நடிகை திரிஷா விஜயின் பிறந்தநாள் அன்று விஜயுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து இருந்தார்.

அதற்கு கூடவே த்ரிஷாவின் மற்றொரு புகைப்படம் வைரலானது .அதில் ஒருவரின் ஷூ இடம்பெற்று இருந்தது. அந்த ஷுவானது நடிகர் விஜய்யின் சூ தான் என்று வட்டமிட்டு அந்த புகைப்படத்தை வைரலாக்கி வந்தார்கள். இதற்கிடையில் பாடகி சுசித்ரா விஜய் திரிஷாவுடன் இருந்து விலகி சங்கீதா உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியிருந்தார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் “உங்களை ஏதாவது ஒன்று அணிய முடியாமல் தடுத்து இருந்தால் அது முழுக்க முழுக்க பிற மக்களின் கருத்துக்கள் கொண்ட எடை தான்” என்று பதிவிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் பல நாட்களாக வெளிவந்த வதந்திகளுக்கு நடிகை திரிஷா முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)