Connect with us

Will you marry me.. வருங்கால மனைவிக்கு க்யூட்டாக சர்ப்ரைஸ் கொடுத்த அஸ்வத்.. வைரலாகும் வீடியோ..!

CINEMA

Will you marry me.. வருங்கால மனைவிக்கு க்யூட்டாக சர்ப்ரைஸ் கொடுத்த அஸ்வத்.. வைரலாகும் வீடியோ..!

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து பிரபலமான கண்மணி மனோகரனுக்கு அவரின் வருங்கால கணவர் சர்ப்ரைஸ் பண்ண வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் கண்மணி மனோகரன். இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இந்த சீரியலில் இருந்து விலகிய இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் டூயல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. மிகவும் போல்டான பெண்ணாக நடித்திருந்தார் கண்மணி. இந்நிலையில் அவர் பிரபல தொகுப்பாளரான அஸ்வத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு நிச்சயமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார் கண்மணி மனோகரன்,

 

இவர் காதலிக்கும் அஸ்வத் சன் டிவியில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் தனது வருங்கால காதல் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கண்மணியின் பிறந்த நாளை முன்னிட்டு அஸ்வத் Will you marry me என்று கடற்கரையில் டெக்கரேட் செய்து அவருக்கு ப்ரபோஸ் செய்து இருக்கின்றார். அதைத்தொடர்ந்து இருவரும் நடனமாடி என்ஜாய் செய்த வீடியோ இணையதில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த சர்ப்ரைஸை சர்ப்ரைஸ் மச்சி என்ற டீம் மிக சிறப்பாக செய்து கொடுத்திருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Surprise Machi (@surprise_machi)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top