உங்க அப்பாவ விட நான்தான் சிறந்த நடிகர் தெரியுமா?… சீண்டிய சிவாஜி- அதுக்கு ஸ்ருதிஹாசனின் பதிலைக் கேட்டு ஷாக் ஆன நடிகர் திலகம்!

By vinoth on ஜூலை 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.

   

சிவாஜிக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் நடிப்பில் தனி முத்திரைப் பதித்து உலக நாயகனாக அறியப்படுபவர் கமல்ஹாசன். கமல்,எப்போதும் சிவாஜியின் நடிப்பை சிலாகித்து பேசிவருபவர். இருவரும் இணைந்து அதிக படங்களில் நடித்ததில்லை. அவர்கள் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் சிவாஜியின் அண்டர்ப்ளே நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்காட்டியது.

   

சிவாஜி பற்றி தன்னுடைய நினைவுகளை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்ட கமல்ஹாசன் “நான் எனக்கு ஷூட்டிங் இருக்கும் போது ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா ஆகியோரை சிவாஜி சாரின் அன்னை இல்லத்தில் கொண்டு போய் விட்டு சென்றுவிடுவேன். அங்குள்ள குழந்தைகளோடு இவர்களும் அங்குள்ள தோட்டத்தில் விளையாடுவார்கள். சிவாஜி சார் ஓய்வாக இருக்கும் போது குழந்தைகளை அழைத்து ஜாலியாக வம்பிழுத்துக் கொண்டிருப்பார்.

 

ஒருநாள் ஸ்ருதியை அழைத்து “இந்தியாவிலேயே சிறந்த நடிகன் யார் தெரியுமா?” எனக் கேட்டுள்ளார். ஸ்ருதி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். அதைப் பார்த்து “நான்தான். உங்கப்பா கிட்ட போய் இத சொல்லு” என அதட்டியுள்ளார். அதைக் கேட்ட ஸ்ருதி ஆவேசமாகி “எங்கப்பா, இந்த மரத்து மேல ஏறுவாரு. நீங்க ஏறுவீங்களா?” என கேட்டுள்ளார். அதைக் கேட்ட சிவாஜி சார் “அந்த கொரங்கு வேலை எல்லாம் நம்மளால முடியாது. உங்கப்பாதான் சிறந்த நடிகர்” என சொல்லிவிட்டார்” என நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.