பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியனின் மூத்த மகனுக்கு சிறப்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி, அதன்பிறகு ஹீரோவாக நடித்த அசத்தி வந்தவர் தான் நெப்போலியன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். உயரம் மற்றும் தோற்றத்தை பார்த்து பாரதிராஜா புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து வில்லன் தோற்றத்திலிருந்து மெது மெதுவாக வெளியே வந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராஜா, கிழக்கு சீமையிலே, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த படங்களாக அமைந்தது. 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நெப்போலியன் நடிப்பை தாண்டி அரசியலிலும் களம் இறங்கினார். மத்திய இணை அமைச்சராக இருந்த இவர் பின்னர் பாஜக கட்சியில் இணைந்து பணியாற்றினார். தன்னுடைய மூத்த மகனுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் அமெரிக்காவில் செட்டிலாகும் நிலை உருவானது.
இதனால் அரசியலை விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டிலான அவர் அங்கு விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றார். தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பு வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்றையும் கட்டி இருக்கின்றார். இந்நிலையில் கடந்த மாதம் அவரது மூத்த மகன் தனுஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் என்று முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று தனுஷ் மற்றும் அக்ஷயா திருமண நிச்சயதார்த்தம் அமெரிக்காவில் மிக சிம்பிளாக நடைபெற்று முடிந்தது. இது குறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
