காமெடி திரைப்படங்களில் நடிப்பதற்கு தனக்கு ஆர்வம் அதிகம் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி .சிறந்த நடிகை என்பதற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கின்றார். மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். மலர் டீச்சர் என்று பலரும் இவரை நீண்ட நாட்கள் அழைத்து வந்தார்கள்.
அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது .தமிழில் தாம் தூம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பிரேமம் திரைப்படம் தான் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் தமிழை காட்டிலும் தெலுங்கில் தான் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.
சமீபத்தில் நடிகர் நாகசைதன்யா உடன் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகின்றார் சாய்பல்லவி. தமிழில் மிகக் குறைந்த அளவில்தான் திரைப்படங்களின் நடித்திருக்கின்றார். தியா, மாரி 2, என்ஜிகே மற்றும் கார்க்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் நான் தெலுங்கில் நடித்த பிதா, லவ் ஸ்டோரி, ஷாம், சிங்காராய், விரட்ட பருவம், எம்சிஏ இப்படி எந்த திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லா கதைகளிலும் முக்கியத்துவம் இருக்கும். நடனத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்த படங்கள் இவை.
ஆனால் இந்த படங்களை எல்லாம் தாண்டி ஒரு வித்தியாசமான திரைப்படத்தில் அதிலும் நல்ல காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை. அந்த மாதிரியான படத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த படத்தில் எனக்கு என்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நான் சம்மதிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.