திடீரென கணவர் பிரேம்ஜிக்கு முத்தமழை.. குட் நியூஸ் சொன்ன இந்து.. அதுக்குள்ளேயேவா.?

By Mahalakshmi on ஜூலை 9, 2024

Spread the love

நடிகர் பிரேம்ஜிக்கு அவரின் மனைவி இந்து முத்தமழை பொழிந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன விசேஷம் என்று கேட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் பல நடிகர்களை பார்த்து ரசிகர்கள் கேட்கும் கேள்வி உங்களுக்கு எப்போ திருமணம். அப்படி அதிகமாக கேட்ட நடிகர்களில் ஆர்யா விஷாலை கூறலாம். அடுத்தபடியாக முக்கிய இடத்தில் இருந்தது பிரேம்ஜி தான். அவரைப் பார்த்தாலே உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று தான் பலரும் கேள்வி எழுப்புவார்கள்.  40 வயதை தாண்டிய இவர் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறி வந்தார்.

   

   

இந்நிலையில் திடீரென்று அவரின் திருமண பத்திரிகை வெளியாகி வைரலாகி வந்தது. ஒரு வழியாக கடந்த வாரம் ஜூன் ஒன்பதாம் தேதி பிரேம்ஜி தனது காதலியான இந்துவை திருத்தணி முருகன் கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவர் ஈரோட்டில் சேர்ந்த ஒரு வங்கி ஊழியர்.

 

அவர் அண்ணன் வெங்கட் பிரபு தாலி எடுத்துக் கொடுக்க இந்துவைக் கரம் பிடித்தார் பிரேம்ஜி. இவர்களின் திருமணத்தில் பிரேம்ஜியின் நண்பரான ஜெய், வைபவ், விஜய் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவை தவிர அனைவருமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகர் பிரேம்ஜி செய்யும் சேட்டைகள் அனைத்தையும் அவரின் மனைவி இந்து வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் கூட அவர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டு வந்த இவர் பின்னர் பிரேம்ஜி வீடு துடைப்பது, துணி துவைப்பது துணியை காய போடுவது போன்ற வேலைகளை செய்யும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இவை அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

என்ன முரட்டு சிங்குலுக்கு வந்த சோதனை இது என்று பலரும் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி இன்றோடு ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில் இந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கணவருடன் முத்த மழை பொழியும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். இப்போதுதான் கல்யாணம் ஆனது போல இருந்தது அதுக்குள்ள ஒரு மாசம் ஆச்சா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.