பிரபல பாப் பாடகியின் கணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் உஷா உதூப். 1960 ஆம் ஆண்டு தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இவர் இன்றுவரை பல பாடல்களை பாடி வருகின்றார். சமீபத்தில் இவருக்கு மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரது கணவர் ஜானி ஜாகோ நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
78 வயதான அவரின் இறுதி சடங்கானது இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றது. மும்பை தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்த உஷா, ஜானி ஜாகோவை முதன் முதலாக 1960 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சந்தித்தார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். உஷா உதுப் இவர் பாப் பாடகராக மாறுவதற்கு ஜானி மிகப்பெரிய அளவில் உதவி செய்திருந்தார்.
இவர்களுக்கு அஞ்சலி மற்றும் சன்னி என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் உஷா உதுப் கணவரான ஜானி நேற்று கொல்கத்தாவில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அசௌகரியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள் . அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்று வருகின்றது. ஜானி ஜாக்கோ உஷா உதூப்பின் இரண்டாவது கணவர் ஆவார்.