சினிமா பிரபலத்தின் அத்துமீறல்கள்… சீரியல் நடிகை பதிவால் சின்னத்திரையில் சலசலப்பு… யார் அந்த நடிகர்?

By Divya on மாசி 2, 2024

Spread the love

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர் மூலம் பிரபலமானவர் தீபா. இந்த தொடரில் வடிவு எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். இதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஏற்கெனவே திருமணமான தீபா முதல் கணவருடன் முறைபடி விவாகரத்து பெற்றுவிட்டார்.

#தீபா பாபு

தனது மகனுடன் வசித்து வந்த தீபா, சாய் கணேஷ் பாபு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தீபாவை மறுமணம் செய்ய சாய் கணேஷ் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என கூறப்பட்டது. இந்த நிலையில் சாய் கணேஷ் பாபுவை தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோவை இணையதளத்தில் தீபா வெளியிட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வருபவர் சாய் கணேஷ் பாபு. இவர் பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இவரை பாபு என்றே அழைப்பார்களாம். தீபாவும் பாபுவும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை ஆரம்பத்திலிருந்தே பாபுவின் வீட்டார் ஏற்கவில்லை என தெரிகிறது.

   
   

#image_title

 

இதனால் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் தீபா. அதில் ஒரு பிரபலத்தின் முகத்தை மூடிய படத்தை பதிவிட்டு, இந்த சினிமா பிரபலத்தின் அத்துமீறல்களை விரைவில் மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். இந்தப் பதிவு சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

#image_title