வயிற்றிலே இறந்த முதல் குழந்தை.. என் கணவரால் தான்.. பல வருடங்களுக்கு பிறகு மனம் திறக்கும் ‘அங்காடித் தெரு’ சோபியா..

By Divya

Updated on:

ஒரு படத்தில் முன்னணி நடிகர்களை தவிர, அப்படத்தில் சிறப்பாக நடித்த துணை நடிகர்கள் மக்கள் மனதில் ஆழப்பதிவர். சினிமாவின் ரசனை மாற மாற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை கூட ஆழ கவனிக்கின்றனர். அப்படி கவனிக்கப்பட்டவர் தான் அங்காடித் தெரு படத்தில் நடித்த சோபியா.

சுகுணா பாண்டி

2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி, மகேஷ் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அங்காடித் தெரு. சென்னையில் அனைத்துப் பொருட்களும் வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலான மக்கள் குவியும் இடம் தியாகராய நகர். பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்குமான பஜாராக தியாகராய நகர் இருக்கும். இங்கு 10 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். வாரத்தில் 7 நாட்களும் இங்கு கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது. இப்படியான இடங்களில் இருக்கும் பெரிய பெரிய கடைகளில், தொழிலாளர்களாக இருப்பவர்கள் எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கு பணிபுரிகின்றனர் என்பதை எதார்த்தமாக வெளிச்சம் போட்டு காட்டியது இப்படம்.

   
சுகுணா நாகராஜன்

சிறு சிறு கிராமங்களில் இருந்து குடும்ப சூழலுக்காக சென்னைக்கு வேலைக்கு வரும் பெண்கள் குடிக்க நீரின்றி, சரியான உணவின்றி, 12 மணிநேரம் நின்றபடியே வேலை செய்து, குறுகிய இடத்தில் நீட்டி படுக்கக் கூட இடமில்லாத இடத்தில் உறங்கி எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் பூக்கும் காதல் ஒன்று எப்படி இணைகிறது என்பது படத்தின் மீதிக் கதை. இப்படத்தில் நடித்த அஞ்சலி, மகேஷ் மட்டுமின்றி ஒவ்வொரு கதாபாத்திரமும் கண்களில் நீர் வரவைக்கும் அளவு எதார்த்த நடிப்பை கொடுத்தினர். அப்படியான ஒரு நபர் சோபியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரது உண்மையான பெயர் சுகுணா. இப்படத்தில் நடித்த பிறகு இப்படத்தின் இணை இயக்குநர் நாகராஜனை திருமணம் செய்து கொண்டார்.

சோபியா சுகுணா நாகராஜன்

நடிகை என்பதை தாண்டி, தற்போது பியூட்டி பார்லர் உரிமையாளராக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்த வீட்டில் தனது நிறம் சார்ந்த வெறுப்புகள் இருந்ததால், தான் நிஜமாகஏ அழகு இல்லை என்ற எண்ணம் அவருக்கு தோன்றியதாம். திருமணத்திற்கு பின், தன்னை விட இவ்வுலகில் அழகு யாருமில்லை என்ற எண்ணத்தை விதைத்து விட்டாராம் கணவர். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான அவர், குழந்தை எட்டாவது மாதத்தில் வயிற்றிலேயே இறந்ததால் கருக்கலைப்பு செய்ததாக கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் தனது கணவர் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், அதிலிருந்து மீண்டு வெளியே வந்து ஒப்பனை வகுப்புகளில் சேர்ந்து தனது கனவுகளை நனவாக்கியதாக உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.