அடுத்த கமல்ஹாசனாய் வர வேண்டியவர்.. பாதியிலேயே காணாமல் போனதன் காரணம் என்ன? காஜா ஷெரீப்பின் தற்போதைய நிலை..

By Divya

Updated on:

சினிமா என்பது எப்போது யாரை உச்சத்திற்கு கொண்டு செல்லும்? எப்போது அது ஒருவரை வீழ்த்தும் என்பது யாருக்குமே தெரியாது. சிறு வயது முதலே சினிமாவில் வளர்ந்து வரும் சிலர் உலகளவில் புகழை பெறும் படியாக இருக்கின்றனர். அதேப் போல பலர் பாதியிலேயே காணாமல் போயிருக்கின்றனர். பலர் சினிமாவை விட்டு வெளியேறி வேறு சில வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் காஜா ஷெரீப்பும் இணைந்துள்ளார்.

காஜா ஷெரீப் பாக்யராஜ்

காமெடியில் கொடிகட்டி பறந்த சினிமாவின் காலத்தில், கே.பாக்யராஜ் நடித்து வெளியான படம் அந்த ஏழு நாட்கள், அதில் பாலகாட்டு மாதவன் கதாபாத்திரத்தில் பாடகராக நடித்திருந்தார் பாக்கியராஜ் . அதில் அவருக்கு சிஷ்யனாக ‘டோலாக்’ . பையனாக தோன்றியவர் தான் காஜா ஷெரீப். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் நடிகரும் இயக்குனருமான விசுவின் இரண்டாவது மகனாகவும் ரகுவரனின் தம்பியாகவும் நடித்திருப்பார்.

   
காஜா ஷெரீப்

12ஆம் வகுப்பு பாஸ் செய்வதே தனது நோக்கமாக அந்த வகுப்பிலேயே பலமுறை இருப்பார். இதை காமெடியாக நடித்திருப்பார். இயக்குனர் சிகரமான கே.பாலச்சந்தர் அவர்கள் இவரை பற்றி சிகரமான அடுத்த கமல்ஹாசன் இவர்தான் என கூறியிருப்பார். அப்படி நடிப்பில் திறமை இருந்தும், பின்னாளில் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது. காலம் மாற மாற நம்மை நமே மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் போல, நடிப்பிற்கான வாய்ப்புகள் கிடைக்காததால், மலேசிய, துபாய், கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதில் தமிழ் நடிகர், நடிகைகளை அங்கு அழைத்து சென்று நிகழ்ச்சி ஏற்பாடு அங்கு ஏற்பாட்டாளாராக பணியாற்றி வருகிறார்.