விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் அதில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறந்த சமயத்தில் சற்று சீரியலை விட்டு விலகினாலும் மீண்டும் என்ட்ரி கொடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் அவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடிக்கின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுடைய பிரம்மாண்ட வீடு இணையத்தில் வைரலானது. 1.5 bhk வீட்டில் ஆலியா குடும்பத்தினர் அனைவரும் வசித்து வந்த நிலையில் ஆசை ஆசையாக கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு சின்னத்திரை நண்பர்கள் அனைவரையும் அழைத்து அமர்க்களம் படுத்தி விட்டார். கோயம்புத்தூரில் இருந்த சொந்த வீட்டை அப்பாவின் மருத்துவ செலவுக்காக பெற்று நான்கு லட்சத்தோடு சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டதாகவும் இப்போ தன் புது வீட்டுக்கு அப்பா அம்மா பெயர் வைத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் ஆலியா அளித்துள்ள பேட்டியில், ஒரு சிறிய வீட்டில் நாங்கள் அனைவரும் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். தற்போது எங்களின் ஆசைப்படி சொந்த வீடு வாங்கியுள்ளோம். சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் எங்களுடைய கனவு வீடு கட்டப்பட்டுள்ளது. இதனை முழுக்க முழுக்க தான் லோனில் தான் கட்டி உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இனியா தொடரில் நடிக்கும்போது ஒரு நாள் ஷூட்டுக்கு தனது சம்பளம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது எனவும் தற்போது ஒரு நாள் ஷூட்டுக்கு 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…