சீரியல் நடிகை நக்ஷத்ராவை தொடர்ந்து… ‘இதயத்தை திருடாதே’ சீரியல் நடிகர் நவீன் கூறிய குட் நியூஸ்… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

By Begam on மாசி 14, 2023

Spread the love

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களும் தற்பொழுது பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி.

   

இவர் ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து நியூஸ் 18, காவிரி என பல தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

   

 

தற்பொழுது சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இவர் கண்மணி சீரியல் நடிகர் நவீனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் நடிகர் நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் இவர் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கண்மணி தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அந்த தம்பதியினர் வெளியிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இத்தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by கண்மணி (@imkanmani)