Categories: சினிமா

மாரடைப்பால் தொடரும் மரணங்கள்… திடீரென மரணமடைந்த 25 வயது பிரபல தமிழ் சீரியல் நடிகர்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

Spread the love

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் சீரியல் நடிகர் பவன் சிங்.இவர் தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு 25 வயதே ஆகிறது. இவர், அதிகம் ஹிந்தியில் சில சீரியல்கள் நடித்து வருவதால், மும்பையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு நேற்று திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரின் திடீர் மறைவு ஹிந்தி மற்றும் தமிழ் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பவன் சிங் சில தமிழ் சீரியல்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே போல் பல ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மாரடைப்பு வரும் அளவுக்கு அவருக்கு அப்படி என்ன நடந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் பவன் சிங் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நடிகர் பவன் சிங், உடலை விசாரணைக்கு பின்னர் மும்பை போலீசார் அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதனை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Begam

Recent Posts

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

5 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

10 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

23 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

24 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

33 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

35 minutes ago