Connect with us

CINEMA

சக சீரியல் நடிகை மீது காதலில் விழுந்த ‘சுந்தரி’ சீரியல் நடிகர்.. விரைவில் டும் டும் டும்.. இவுங்க தான் அந்த நடிகையா..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று  ‘சுந்தரி ‘. இந்த சீரியல் முதலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாட்கள் செல்ல செல்ல எப்பதான் சீரியலை முடிக்க போறீங்க என்ற லெவலுக்கு கொண்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து ஒருவழியாக சுந்தரி சீசன் 1 நிறைவடைந்தது. அடுத்ததாக தற்பொழுது சுந்தரி 2 தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.

   

இந்த சீரியலில் ‘கிருஷ்ணா’ என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவின் நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  நடிகர் அரவிஷ். சுந்தரி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த சீரியலில்  சீரியல் மட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‌

இப்படி பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் அரவிஷ்,   தெலுங்கு சீரியல் நடிகை ஹரிகா என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து காதலர்களாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வந்தனர்.

இந்நிலையில் இவர்களிருவரும் தற்பொழுது தங்களது காதலை அதிகாரபூர்வமாக இணையத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதனையறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aravish Glitzy (@aravish_glitzy)

Continue Reading

More in CINEMA

To Top