Connect with us

CINEMA

இவங்க தான் பிரதீப் ஆண்டனியின் காதலியா…? Live -ல் முதன்முறையாக தனது காதலியை அறிமுகப்படுத்திய பிரதீப்… வைரலாகும் புகைப்படம்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்  7 நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருந்து வந்தவர் பிரதீப் ஆண்டனி. இந்நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சகா போட்டியாளர்கள் டார்கெட் செய்யப்பட்டு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார்.

   

தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்ட் கொடுத்து எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்நிலையில், பிரபலங்களும், ரசிகர்களும், விஜய் டிவி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை இணையத்தில் பதிவு செய்தனர்.

அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களும், பதிவுகளும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் முதன்முறையாக சுரேஷ் சக்ரவர்த்தியுடன் லைவ்வில் கலந்து கொண்டுள்ளார் பிரதீப்.

அந்த லைவில் தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend-ன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சுரேஷ் சக்ரவத்தியின் லைவில் தன்னுடைய Girl Friend உடன் கலந்துகொண்டுள்ளனர் பிரதீப். அப்போது சுரேஷ் சக்ரவத்தி இவர் தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend என கூறி அறிமுகம் செய்து வைத்துள்ளார். தற்பொழுது அவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top