சினிமாவில் சம்பாதித்ததை புத்திசாலிதனமாக முதலீடு செய்த செந்தில்.. கோடிக் கணக்கில் இருக்கும் சொத்து..

By vinoth on பங்குனி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

   

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

   

செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். ஆனாலும் தான் வாங்கிய சம்பளத்தை எல்லாம் சிறப்பாக முதலீடு செய்த சினிமா பிரபலங்களில் செந்திலும் ஒருவர். சாலிகிராமம் , வளசரவாக்கம் எல்லாம் அப்போது வளர்ந்து வரும் பகுதிகள்.  அங்கெல்லாம் நிலங்களை வாங்கிப் போட்டு வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டாராம்.

 

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பகுதிகளின் ரியல் எஸ்டேட் மதிப்பு எங்கோ சென்றுவிட, அவரின் சொத்து மதிப்பு இப்போது பல கோடிகளில் பெருகியுள்ளதாம். சினிமாவில் அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கிய எத்தனையோ நடிகர் நடிகைகளின் சொத்து மதிப்பை விட இப்போது செந்திலின் சொத்து மதிப்பு பல கோடி அதிகம் என சொல்லப்படுகிறது.