ஜோதிகா போலவே இருக்கும் மகள்… நடிகர் சூர்யாவோட பசங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா…? லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam on பங்குனி 7, 2024

Spread the love

கோலிவுட் சினிமாவில் முன்னணி  நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்பொழுது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்து விட்டு தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

#image_title

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும்  திருமணம் செய்து கொண்டு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.  ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா ஜோதிகா, பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில்  இணைந்து நடித்தனர்.

   
   

 

‘காக்க காக்க’ திரைப்படத்தில் இணைந்த நடித்த போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டிலும் சம்மதம் கூற 2006 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ்  என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தியா கிட்டத்தட்ட 487 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் மகள் தியாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘ அச்சு அசலாக அம்மாவை போலவே மாறிட்டாங்களே’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…