1948-லே 4 கோடி ரூபாய் வசூலித்த ‘சந்திரலேகா’.. ஆனாலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபமில்லையாம்.. ஏன் தெரியுமா?

By vinoth on பங்குனி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1945 வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் 3 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

   

இந்த படத்தில் முக்கிய நட்சத்திரங்களாக ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, வி. என். ஜானகி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரி பாய்  உட்பட பலர் நடித்திருந்தனர்.  படத்தின் பாடல்களுக்கு எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்களும், காட்சிகளின் பின்னணிக்கு எம்.டி. பார்த்தசாரதி அவர்களும் இசையமைத்திருந்தனர்.

   

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பாக வரும் ட்ரம்களின் மீதான குழு நடனமும், அட்டகாசமான சர்க்கஸ் காட்சிகளை படமாக்கிய விதமும் ரசிகர்களை சீட் நுனியிலேயே உட்கார வைத்தது. அதே போல ரஞ்சனின் வில்லத்தனமான நடிப்பு, டி.ஆர். ராஜகுமாரியின் கவர்ச்சிகரமான தோற்றம், என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் நகைச்சுவை காட்சிகளும் படத்தின் வெற்றியை உறுதி செய்தன.

 

தமிழக அளவில் சக்கைபோடு போட்ட இந்த திரைப்படத்தை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட்டார் எஸ் எஸ் வாசன். இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூலம் இந்த படம் அந்த காலத்திலேயே 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. ஆனால் இந்த படத்துக்காக வரியாகவே 1.25 கோடி ரூபாய் அளவுக்கு செலுத்த நேரிட்டதாக வாசன் ஒரு இடத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வரி, திரையரங்க பங்கு மற்றும் விநியோகஸ்தர்களின் பங்கு போக சொற்பமான லாபமே தயாரிப்பாளரான தனக்கு கிடைத்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.