“தமிழ்நாடே உற்று நோக்கும் அந்த 35 கோடி ரூபாய் வழக்கு”…. சிக்கிய ஆதாரங்கள்…. நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வைத்த அதிரடி வாதம்….!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் போது செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ₹35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனையானது என்றும், வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தற்போது முதற்கட்ட விசாரணை மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், தவெக ஆட்சியை கவிழ்க்கத் திட்டமிட்டு பேரம் பேசப்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களும் காரசாரமாக முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.