விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த ‘கருப்பு ஆடு’.. அறிவாலயத்திற்குப் போன தவெக-வின் ரகசிய ஃபைல்கள்…. உளவுத்துறையில் நடந்த ‘உள்வேலை’…. கோட்டையில் பயங்கர ட்விஸ்ட்….!

By Nanthini on ஆடி 8, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களை உலுக்கும் வகையில் ஒரு புதிய சிக்கல் முளைத்துள்ளது. தவெக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள், ரகசிய ஆலோசனைகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த உளவுத்துறை அறிக்கைகள், புதிய அரசுக்குத் தெரியும் முன்பே எதிர்க்கட்சியான திமுக தரப்பிற்குச் கசிந்து வருவதாக ஆளுங்கட்சி வட்டாரங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. மாநிலத்தின் மிக முக்கியமான உளவுத்துறை தகவல்கள் இன்னும் எதிர்க்கட்சியின் கரங்களுக்குச் சென்று கொண்டிருப்பது தவெகவின் உயர்மட்டத் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, உளவுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம் தான் என்றாலும், லோக்கல் அளவிலான ஐபி அதிகாரிகள் பலர் இன்னும் மாற்றப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்ததால், உளவுத்துறையின் கட்டமைப்பு மற்றும் அதில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் யார் என்பது திமுகவிற்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். அதோடு, இது போன்ற உளவுத்துறை ரிபோர்டுகளை எழுதும் கன்டென்ட் ரைட்டர்கள் பலர் இன்னமும் பழைய பாசத்திலோ அல்லது வேறு சில காரணங்களாலோ எதிர்க்கட்சித் தலைமையுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்களிலேயே கிசுகிசுக்கப்படுகிறது.

   

அரசு நிர்வாகத்தின் மிக ரகசியமான தகவல்கள் எவ்வாறு வெளியே கசிகின்றன, தங்களுக்கு வர வேண்டிய உளவுத்துறை தகவல்கள் எப்படி எதிர்க்கட்சிக்கு முன்கூட்டியே கிடைக்கின்றன என்பது குறித்து தவெக தலைமை தீவிரமாக யோசித்து வருகிறது. “நமது அரசுக்குள்ளேயே இருக்கும் அந்த கருப்பு ஆடு யார்?” என்று தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தங்களுக்குள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதிகாரிகள் மத்தியில் இருக்கும் இந்த இரட்டை விசுவாசம் தவெகவின் புதிய திட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்கூட்டியே எதிர்க்கட்சிகளுக்குக் காட்டிக் கொடுத்து, அரசின் செயல்பாட்டையே முடக்கிவிடுமோ என்ற அச்சம் தவெக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக வெற்றி கழகம் என்பது அரசியலுக்கும், குறிப்பாக கோட்டை நிர்வாகத்திற்கும் முற்றிலும் புதிய ஒரு கட்சியாகும். தேர்தல் களத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், கோட்டைக்குள் இருக்கும் அதிகார வர்க்கத்தை எப்படிக் கையாள்வது, உளவுத்துறையை எப்படி கட்டுப்படுத்தி முழுமையாகக் கண்காணிப்பது என்பதில் தவெகவிற்குப் போதிய அனுபவம் இல்லை என்பதே தற்போதைய யதார்த்த நிலை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த தகவல் கசிவுப் பிரச்சனையைத் தடுக்க, உளவுத்துறையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய தவெக தலைமை தற்போது திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.