புதுச்சேரி அரசியலில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, தவெக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரின் உதவியுடன் ஆட்சியைத் தொடர முதலமைச்சர் ரங்கசாமி விரும்புவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஒருவேளை இந்த நகர்வு நடந்தால், அது காங்கிரஸுக்குப் பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இதனால் உஷாரான காங்கிரஸ் தலைமை, தவெக உடனான தங்களது கூட்டணியை முன்கூட்டியே உறுதிப்படுத்தும் நோக்கில், விரைவில் தவெக தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
