செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி?… யாரும் எதிர்பார்க்காத திடீர் ட்விஸ்ட்..!

By Nanthini on ஆடி 14, 2025

Spread the love

கடந்த 2011 முதல் 2015 ஆம் வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்த நிலையில் திமுகவில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டும் என கோவை வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்துள்ளது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சியினர் பழங்குடி மக்கள் இதில் பங்கேற்றனர். முறைகேடு வழக்கில் ED விசாரணையில் உள்ள செந்தில் பாலாஜி இரண்டு முறை பதவியை இழந்தார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை வழங்குவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.