அந்த 2013 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் ரித்விகா. அடுத்த ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். 2016 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கபாலி உள்ளிட்ட ஆறு திரைப்படங்களில் நடித்திருந்தார். அண்மையில் இவர் நடிப்பில் லெவன் மற்றும் டிஎன்ஏ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார். இப்படியான நிலையில் தனது திருமணம் குறித்து அறிவிப்பை ரித்விகா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், கைத்தளம் பற்ற என குறிப்பிட்டு தனது வருங்கால கணவரான வினோத் லட்சுமணனை டேக் செய்துள்ளார். முகத்தை காட்டாதபடி நிச்சயதார்த்தத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரித்விகா பகிர்ந்து உள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
