ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
