“மேஜையில் மிக்சர் வச்சிருந்தா சாப்பிட்டிருப்பாங்க” EPS-ஐ பங்கமாக கலாய்த்த செந்தில் பாலாஜி..!!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், வரும் மூன்றாம் தேதி கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், அங்குள்ள மொத்த  வாக்குச்சாவடிகளிலும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பணிகளை முன்னெடுக்கப்பட இருக்கிறோம். 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கோவை மாவட்டத்தில் திமுக உறுப்பினர்களாக இணைக்க இருக்கிறோம். தமிழக இளைஞர்கள் திமுகவுடன் இருப்பதால் புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றி கழகத்திலிருந்து திமுகவிற்கு வந்தவர்களை சந்தித்தது வழக்கமான நடைமுறையே. 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் .  கோவையில் பெரியார் நூலகம், தங்க நகை தொழிற்பேட்டை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, பாஜகவோடு கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள் இப்போது அமைதியாக அவர்களோடு இணைந்து இருக்கிறார்கள், மேஜையில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு இருப்பார்கள்” என்று கூறினார்.