வாழையை விட அந்த படம் சூப்பர்… இது பத்தாதுன்னு தான் சொல்லுவேன்… மாரி செல்வராஜ் குறித்து இயக்குனர் ராம் பளீச்..!

By Soundarya on ஆடி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக வளர்ந்திருப்பவர் தான் ராம்.  கற்றது தமிழ், தங்க மீன்கள் என தொடர்ந்து வித்யாசமான திரைப்படங்களை இயக்கிய இவர் தற்போது பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம்  பங்கேற்று வருகின்றார்.  அந்தவகையில் பெட்டியில் பேசிய இயக்குனர் ராம், ” மாரி செல்வராஜின் வெற்றி எங்கள் வீட்டின் வெற்றி. எங்கள் குழுவின் வெற்றி. இது பத்தாது என்று தான் கூறுவேன். பாரதிராஜாவுக்கு அடுத்த படியாக மாரிசெல்வராஜ் தான்.

அவரிடம் உள்ள கதைகளை வைத்து சொல்கிறேன்.  பான் இந்தியா இயக்குனராக மாறுவதற்கான எல்லா தகுதிகளும் அவருக்கு உள்ளது. படத்துக்கு படம் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். பரியேறும் பெருமாள் விட வாழை எனக்கு மிகவும் பிடித்தது. பைசன் படத்தை பார்த்தேன். அது வாழையை விட எனக்கு ரொம்பவும் பிடித்தது” என்று தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜை மனதார பாராட்டி இருக்கிறார்.