செந்தில் பாலாஜிக்கு எதிரான குதிரை பேர வழக்கு மற்றும் டாஸ்மாக் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சமயத்தில் தவெக அரசு அவரை கைது செய்யும் தீவிர முனைப்பில் இருந்தபோதிலும், நீதிமன்றத்தில் தனது வலுவான சட்டப் போராட்டத்தின் மூலம் அந்த முயற்சிகளை ‘விஎஸ்பி’ முற்றிலும் தவிடுபொடி ஆக்கி வருகிறார்.
அரச தரப்பில் போதிய சான்றுகளுடனும் வலுவான வாதங்களுடனும் நீதிமன்றத்தை அணுகத் தவறியதே இந்த இடைக்காலத் தடை நீட்டிப்புக்கு முக்கியக் காரணம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டும் அதே வேளையில், இந்த வழக்கு தள்ளிவைப்பு செந்தில் பாலாஜிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தற்காலிகப் பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது.
