திடீர் திருப்பம்… முடிவை மாற்றி பின்வாங்கிய செந்தில் பாலாஜி… அதிருப்தியில் திமுக தலைமை…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக எந்த முறையும் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை தான் நிலைநாட்ட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணி மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து பல பிளான்களை போட்டு கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவிதாவை திமுகவில் இணைத்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது தலைமை அப்செட் ஆகியுள்ளதாம். அரசியல் அறம், கூட்டணி தர்மம் இன்றி செயல்படுவதாக எம்பி ஜோதிமணி கடுமையாக சாடி இருந்த நிலையில் கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது என செல்வப்பெருந்தகையும் கூறியுள்ளார். இதனிடையே தன்னுடைய X பதிவை செந்தில் பாலாஜி நீக்கி தனது முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளார்.