திமுக கூட்டணியில் விரிசல்… செந்தில் பாலாஜி செய்த வேலையால் ஸ்டாலினுக்கு வந்த புதிய சிக்கல்… புதிய பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 25, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக எந்த முறையும் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை தான் நிலைநாட்ட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணி மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து பல பிளான்களை போட்டு கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி பொறுப்பாளர் கவிதா திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட X தள பதிவால் சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக மற்றும் காங்கிரஸ் இருக்கும்போது ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒரு நிர்வாகியை திமுகவில் இணைத்தது சரியானது அல்ல. இது கூட்டணிக்கே மோசமானது. இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.