அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வருபவர் நடிகர் சவுபின் சாகிர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மஞ்சுவல்பாய்ஸ் படத்தில் லீடு கேரக்டரில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து தயாரித்திருந்தார். அடுத்ததாக ரஜினிகாந்தின் கூலி படத்திலும் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது இந்த படத்திற்காக 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கேரளாவை சேர்ந்த சிராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். வங்கி கணக்கை முடக்கம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இவர்கள் மீது போலீஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக சிராஜ் ஏழு கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அவருக்கு 40 சதவீதம் லாபத்தில் பங்களிப்பதாக சவுபின் உள்ளிட்டவர்கள் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. 47 கோடி ரூபாய் தராமல் பண மோசடி செய்துள்ளதாக சிராஜ் புகார் அளித்த நிலையில் இந்த விவாகரத்தில் வாக்குமூலத்தையும் வங்கிக் கணக்குகளையும் ஆராய்ந்த காவல்துறையினர் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடித்துள்ளார்கள்.
இதனையடுத்து அவர் வருமானவரி செலுத்துவதிலும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. தயாரிப்பாளர்கள்மீது கிரிமினல் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து இன்றைய தினம் சவுபின் சாஹிரின் பரவா ஃபிலிம்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அவர் வருமான வரி செலுத்துவதிலும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் பட்ஜெட் 18.65 கோடி ரூபாய் என்ற வகையில் படத்தின் பட்ஜெட் 22 கோடி ரூபாய் என்று சவுபின் சாஹிட் மோசடி செய்துள்ளது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் சவுபின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.