நடிகை சமந்தாவின் வாழ்க்கையில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து ஏகப்பட்ட சோக சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்துக்கும் மேலாக அவருடைய அப்பா தற்போது உயிரிழந்துள்ளது அவரை ஒட்டுமொத்தமாக முடக்கி விட்டது. இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து உள்ள நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். நடிகர் நாக சைதன்யாவை காதலை சேர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
சிறுவயதிலிருந்தே சமந்தாவை போல்டாக வளர்த்தது அவருடைய தந்தை ஜோசப் பிரபுதான். தெலுங்கு மற்றும் ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென உயிரிழந்து உள்ளார்.நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், அதை குறிக்கும் விதமாக, ‘Until we meet again Dad’ என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு “மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா” என மனமுடைந்து பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா. இதனைத் தொடர்ந்து சமந்தாவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.