நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற சோபிதா உடன் டேட்டிங் செய்து வந்தார். அப்போது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளானது.
ஆனால் தங்களுக்குள் இருக்கும் காதலை இருவரும் மறைத்தே வைத்திருந்தனர். இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது.நிச்சயதார்த்தம் முடிந்ததை தொடர்ந்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர்.
கடந்த தீபாவளியை கூட இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடினர். இந்த நிலையில் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டிசம்பர் மாதம் நான்காம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. அங்கு நாக சைதன்யாவின் தாத்தாவும் நடிகருமான நாகேஸ்வரராவின் சிலைக்கு முன்பு இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திருமண கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி இன்று ஹெல்தி விழா நடைபெற்று உள்ளது.அதில் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி வாழ்த்தினர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.