இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் அனைவரின் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. twitter instagram facebook போன்றவற்றில் தான் மக்கள் முழு நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள். பொழுதுபோக்கு அம்சங்களாக இது எல்லாம் மாறிப்போனது. whatsapp அவ்வப்போது தனது பயனர்களுக்காக பல அப்டேட்டுகளை அறிவிக்கும். அதேபோல தற்போது instagram பல அப்டேட்களை கூறியிருக்கிறது. அதில் இந்த முறை instagram அப்டேட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் வருகிறது என்பதை பற்றி இனி காண்போம்.
வாட்ஸ் அப்பை போலவே இன்ஸ்டாகிராம் தற்போது பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் புதிய வசதியை கொண்டு வந்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இந்த சிறப்பம்சம் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய அம்சத்தின் மூலம் instagram-மில் டைரக்ட் மெசேஜ் பிரிவில் லைவ் லொகேஷனை ஒரு மணி நேரம் வரை பகிரலாம். இது ஒரு குழுவின் செயல்களை ஒருங்கிணைக்க அல்லது நெரிசலான இடங்களில் ஒருவரை ஒருவர் கண்டறிய உதவுகிறது.
லைவ் லொகேஷன் அம்சம் பயன்பாட்டில் இருக்கும்போது நீங்கள் விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே ஷேர் செய்யலாம். தனிநபரின் பிரைவசியை கருத்தில் கொண்டு தான் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எந்த நேரத்திலும் உங்களது இருப்பிடத்தை பகிர்வதை நீங்கள் நிறுத்திக் கொள்ளவும் செய்யலாம். அடுத்ததாக இன்ஸ்டாகிராம் 17 புதிய ஸ்டிக்கர் பாக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உங்களது அன்பானவர்களுடன் பேசும்போது சுவாரஸ்யமாக இருக்க 300க்கும் மேற்பட்ட வேடிக்கையான ஸ்டிக்கர்களை இனி பயன்படுத்த முடியும்.
இது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் தற்போது உங்களுக்கு அல்லது உங்களது நண்பர்களுக்கும் செல்லப் பெயர்களை வைக்கவும் மற்றொரு புதிய அம்சத்தையும் டிஎம்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிக நீண்ட பெயர்களை எளிதாக சிறிய பெயராகவும் அல்லது உங்கள் செல்லப் பெயரை கூட நீங்கள் வைத்துக் கொண்டு இதை பயன்படுத்தலாம். இப்போது instagram கொண்டு வந்திருக்கும் புதிய அம்சங்கள் ஆனது இன்ஸ்டா பயனர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமான அப்டேட் ஆகவும் இருக்கும் என்பது சந்தேகம் இல்லை.